--- --:--:-- --

மே 1 முதல் வெயில் கொளுத்தும்..!

2

சென்னையில் மே 1ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 2ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இதன் காரணமாக, அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இந்த நிலையில், சென்னையில் மே 1ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

 

அதேபோல், சென்னையில் மே 5ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றும், தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வரும் நாட்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon