ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
மார்ச் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக உயர்ந்தது. அதே போல தான் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது. தொடர்ந்து நேற்று ஒரே நாளில் மட்டுமே 2 முறை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பிறகு மாலையில், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கும் சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஏப்ரல் 3ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,850க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,545க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





