--- --:--:-- --

யூடியூபர் மதனின் மனைவி அதிரடி கைது..!

3

யூடியூபர் மதனின் மனைவியை கைது செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார். கணவர் மதனுக்காக யூடியூப் சேனலில் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் மனைவி கிருத்திகா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

ஆபாச பேச்சுக்கள் மூலமாக பப்ஜி என்ற விளையாட்டை யூடியூபில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து நேரலை செய்து வந்ததாக யூடியூபர் மதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 170 புகார்கள் வந்துள்ளது.

 

அவருடைய வீட்டிற்கு சென்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திய போது அவருடைய மனைவி கிருத்திகா என்பவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மதனுடைய தந்தையையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.

 

இந்த நிலையில் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டதற்கு மனைவிக்கும் பங்கு உண்டு என்று அவரையும் கைது செய்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon