மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது..!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வந்தன. இதுகுறித்து முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் தனிப்படை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார். அப்போது உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிவசங்கர் பாபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் குழு டேராடூன் நுழைந்தபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அவர் வெளிநாடு தப்பாமல் இருக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை முடக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள காசியாபாத்தில் தங்கியிருந்த சிவசங்கர் பாபா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.







