திருப்பூரில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞர்!
திருப்பூரில் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருப்பூர் குமரன் சாலையில் மணிமாறன் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையின் வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு கடையை திறக்க சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியே செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் ஒருவர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சாவகாசமாக திருடிச் சென்றுள்ளனர். இக்காட்சிகளை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன .தற்போது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இடங்களை தேடி வருகின்றனர்.





