போதையில் அண்ணனின் நண்பனைக் குத்திக் கொன்ற இளைஞர் !
மதுபோதையில் நண்பரை கொன்றவரை அவரது சகோதரரே பழிக்குப்பழியாக கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் நடந்ததுள்ளது. காவல்துறை நடவடிக்கை என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் காந்தி நகரை சேர்ந்தவர் 21 வயதான வினோத். வாடகை கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். ஆனந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான ஜெனிஷ்டன், இவரும் வினோத்தும் நண்பர்கள். சனிக்கிழமை இரவு வினோத்தின் வீட்டருகே உள்ள தென்னந் தோப்பில் இருவரும் கள் குடித்துள்ளனர்.
போதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த வினோத் வீட்டிற்கு சென்று வெட்டு கத்தி எடுத்து வந்து ஜெனிஸ்டரின் வயிற்றில் குத்தியுள்ளார். ஜெனிஷ்டர் அலறவே போதை தெளிந்த வினோத்துக்கு தான் செய்த தவறு புரிந்தது. அதனால் அவரும் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வெளியில் வந்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனது அண்ணனை வினோத் வெட்டி விட்டார் என்ற தகவல் அறிந்த ஜெனிஸ்டரின் தம்பி 19 வயதான வினிஸ்டன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு நின்றுகொண்டிருந்த வினோத்தை கூர்மையான கம்பியால் பில் குத்தியுள்ளார்.
குத்தப்பட்ட வினோத் தென்னந்தோப்பில் இருந்து வீட்டை நோக்கி ஓடிய நிலையில் நடு ரோட்டில் விழுந்து உயிரிழந்தார். வினோத் கொலை வழக்கில் வினிஸ்டனை போலீசார் கைது செய்துள்ளனர். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நண்பரை இளைஞன் கத்தியால் குத்த நண்பரின் சகோதரர் இளைஞரை கொலை செய்த சம்பவம் ஆசாரிபள்ளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







