இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த பயங்கரம்.. கத்திரிக்கோலால் சரமாரியாக குத்தி கொன்ற கொடூரன்..!
கேரளாவில் மது போதையில் சிகிச்சைக்கு வந்த இளைஞரால் இளம் பெண் மருத்துவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்காடு தாலுகா மருத்துவமனையில் வந்தனா என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்து சந்திப் என்ற இளைஞர் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து தன்னுடன் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினார். இதில் மருத்துவர் வந்தனா உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐந்து இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா பரிதாபமாக உயிரிழந்தார். தகராறில் ஈடுபட்ட இளைஞர் வீட்டில் ஏற்பட்ட சண்டையின் போது காயம் அடைந்து அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்ததாக கூறப்படுகிறது.





