பஸ் உரசியதால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த பெண்..!
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே மூன்று பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது சிற்றுந்து உரசியதில் வாகனத்துடன் தடுமாறி கீழே விழுந்த பெண்களில் ஒருவர் பலியானார்.
அடைய கருங்குளம் பகுதி சேர்ந்த 25 வயதான ரம்யா என்பவர் தனது உறவுக்கார பெண்கள் இருவருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னால் வந்த சிற்றுந்து இருசக்கர வாகனத்தை கடந்து செல்லும் பொழுது பக்கவாட்டில் உரசியது. வாகனத்துடன் மூன்று பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் பின்னால் அமர்ந்திருந்த பெண் சிற்றுந்தின் பின் சக்கரத்தில் சிக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.





