போரில் இருந்து உயிர் தப்பிய இளம் தம்பதிகள்..!
ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் உருக்குலைந்து கொண்டிருக்கும் நிலையில் நிகழ்ந்த ஒரு திருமணம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்தியரை மணந்து கொண்ட பெண் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக போர் தொடுத்தது. அதற்கு ஒரு நாள் முன்பாகவே பிப்ரவரி 23ஆம் தேதி உக்ரைனில் ஒரு பெண்ணுக்கும், அவருடன் பணி புரிந்துவரும் இந்தியருக்கும் உறவில் திருமணம் நடந்தது. மறுநாளே வரவேற்பு நிகழ்ச்சிக்காக இந்தியாவிற்கு புதுமண தம்பதி வந்துவிட்டனர்.
சொந்த நகரான ஹைதராபாத்தில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு புதுமண தம்பதியரை வாழ்த்தினர். இந்தியா வந்ததும் உக்ரைன் மீது போர் தொடங்கியது.






