திருடன் என நினைத்து காதலனை அடித்த பொதுமக்கள்..!
குமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகசேலம் இளைஞர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு முகநூல் மூலம் சேலம் எடப்பாடியை சேர்ந்த 24 வயது கலையரசன் என்பவன் அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் வாட்ஸ்அப்பில் பழகிய நிலையில் மார்த்தாண்டம் அருகே அடிக்கடி லாட்ஜில் சந்தித்து பழகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் வீட்டின் சுவர் ஏறி குதித்ததால் பொதுமக்கள் திருடன் என்று நினைத்து அடித்த நிலையில் இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
மகளை துன்புறுத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கலையரசனை கைது செய்த போலீஸார் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.






