அரசு வழங்கும் இலவச அரிசியில் புழுக்கள்…வேதனை தெரிவிக்கும் மக்கள்!
144 தடை உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு அரசு அளிக்கும் இலவச அரிசியில் வண்டுகள், புழுக்கள் உள்ளதாக மக்கள் வேதனை அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துபாக்கம் அரசு நியாயவிலைக் கடையில் இன்று பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் நிவாரண தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த அரிசி தரமற்ற நிலையில் உள்ளது. வண்டுகள் மற்றும் புழுக்கள் அதில் காணப்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அரசு வழங்கும் இந்த அரிசியை நம்பி திருவள்ளுவர் நகர், பூங்கா நகர், எம்ஜிஆர் நகர், திருவிக நகர் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உடன் தற்போது அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாததால் செலவுக்கு பணமின்றி தவிக்கும் பாமர மக்கள் அரசு வழங்கும் இந்த அரிசியை நம்பி தான் குடும்பத்தை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் தரமற்று வழங்கப்படும் பொருட்கள் குறித்து அரசு கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் .






