மகளிர் உரிமைத் தொகை.. அடுத்த வாரம் முகாம்..!
மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க அடுத்த வாரம் முகாம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 4-ம் தேதி தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் முகாம்கள் நடைபெற இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதை எதிர்பார்த்து இருந்த பெண்கள், முகாம் நடைபெறாததால் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், அடுத்த வாரம் முகாம்கள் முழு அளவில் செயல்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.





