--- --:--:-- --

இயக்குனர் பாக்கியராஜ் காலமானார்.. முதலமைச்சர் விஜய் அஞ்சலி.!

02

டிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் இன்று காலமான நிலையில் அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் திரையுலகின் மூத்த திரைக்கதை ஆசிரியரும், இயக்குநர் பாரதிராஜாவின் நெருங்கிய படைப்புத் துணையுமான கே. பாக்கியராஜ் இன்று மாரடைப்பால் காலமானார்.

 

அவரது மறைவு, தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் அவரது குருவும், நெருங்கிய நண்பருமான பாரதிராஜா மறைந்த நிலையில், தற்போது பாக்கியராஜின் மறைவும் திரையுலகை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவு செய்தியை கேட்ட முதலமைச்சர் விஜய், நடக்க விருந்த தமிழக வெற்றிக்கழகம் இணைவு விழாவை ரத்து செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்கியராஜின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

 

தொடர்ந்து பாக்கியராஜ் உடலுக்கு செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாக்யராஜின் இறுதிப்பயணம் வரை குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்துள்ளார்.

மேலும், பழம்பெரும் இயக்குநர் பாக்யராஜின் மறைவு உலக சினிமாவுக்கு மிகப்பெரும் இழப்பு என்றும், தனித்துவமான கதை சொல்லும் முறை, மக்களின் மனங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளதாகவும் ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே மாணவரையும் தமிழ் திரையுலகம் இழந்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்கியராஜின் உடலுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

 

 

இந்திய திரையுலகில் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் உடலுக்கு நடிகர்கள் ஜெயராம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பி.வாசு, மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கலையரசன், ராதிகா, சுஹாசினி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.

 

பாக்யராஜ் உடலுக்கு திரைப்பட இயக்குநர்கள் பாண்டியராஜன், மணிரத்னம், பார்த்திபன், சமுத்திரக்கனி, எஸ்.ஏ.சந்திரசேகர் அஞ்சலி செலுத்தினர். மேலும், சந்தானபாரதி, எல்.விஜய், வினோத், லோகேஷ் கனகராஜ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon