--- --:--:-- --

குழந்தை பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மரணம்..!

5

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தியமங்கலம் கோடை பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த துர்காவுக்கு கடந்த 20ம் தேதி குஞ்சு புளியம்பட்டி சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

 

இதனிடையே துர்காவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

முன்னதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் தான் துர்கா உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து சுமார் 5 மணி நேரங்களை பெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

Right Menu Icon