மது வாங்கி தராததால் கழுத்தை நெரித்து கொன்ற பெண்..!
சென்னை சென்ட்ரல் முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள எஸ்எம் நகரில் மணிவண்ணன் என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆன நாகம்மாள் என்பவரோடு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இருவருக்கும் குடிப்பழக்கம் உள்ள நிலையில் மது வாங்கி தராததால் தகராறு ஏற்பட்டு மணிவண்ணனை கழுத்தை நெரித்து நாகம்மாள் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





