திருமணமான 4 நாட்களில் பெண் மர்ம மரணம்.. பெற்றோருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு..!
பட்டுகோட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தாய் மற்றும் தந்தையை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலி வீட்டிற்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த விவகாரம் அறிந்து பெண்ணின் பெற்றோர் ஐஸ்வர்யாவை வீட்டில் அடைத்து வைத்த நிலையில் கடந்த 3ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ஐஸ்வர்யாவின் உடலை பெற்றோர் மயானத்தில் வைத்து எரித்தனர்.
இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் கணவர் நவீன நடித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
15 மணி நேரம் விசாரணையின் அடிப்படையில் ஐஸ்வர்யாவை கடுமையாக தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை 15 நாள் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.





