மேடையில் பேசிக் கொண்டிருந்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி உயர்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித ஆசிரியராக ரம்யா என்பவர் பணியாற்றினார். இவருக்கு வேறு பள்ளிகளிடம் ஆறுதல் கிடைத்தது.
தொடர்ந்து அந்த பள்ளியில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியர் ரம்யா மாணவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் மாணவர்கள் எந்த காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கண்ணீர் விட வைக்கக்கூடாது என்றும் அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் திடீரென்று ரம்யா மயங்கி விழுந்தார். உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆசிரியர் ரம்யா இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.
பிரிவு உபசார விழாவில் ஆசிரியை மயங்கி விழுந்து இருந்தது சக ஆசிரியர்களையும் பெற்றோரையும் மாணவர்களையும் பெரும் சோகத்திற்கு உள்ளாகியது.





