--- --:--:-- --

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி‌ஏ‌ஓ கைது..!

9

திருவள்ளூரில் விவசாய நில பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி‌ஏ‌ஓவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

 

வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி தன் தந்தை பெயரில் உள்ள ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தின் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு வி‌ஏ‌ஓ ஆக உள்ள மோகனப்பிரியா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

 

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்த மூர்த்தி அவர்களுக்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மோகனப்பிரியா அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர் .

Leave a Reply

Right Menu Icon