--- --:--:-- --

சசிகலாவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது..!

8

சிகலாவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் முடிந்த சசிகலா இன்று விடுதலையானார். விடுதலை தொடர்பாக அவரிடம் விடுதலை பத்திரம் வழங்கப்பட்டது.

 

அப்போது அதனுடன் சேர்த்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதத்தையும் வழங்கியிருக்கிறது. சிறைத்துறைபத்திரம் வழங்கப்பட்டபோது அமலாக்கத் துறையின் கடிதத்தையும் சிறைத்துறையில் இணைந்து வழங்கியுள்ளது.

 

கடந்த வருடம் சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனைநடைபெற்றது. அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டன .

 

இந்த நிலையில் சொத்துக்கள் வாங்கியதற்கான பல கூடுதல் தகவல்களையும் வழங்குவதற்கு அமலாக்கத்துறை தற்போது கோரிக்கை விடுத்துள்ளது. அமலாக்கத்துறை கடிதங்களுக்கு சசிகலா உரிய பதில் அளிக்காத நிலையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon