தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா..? தளர்வுகளா..?
தமிழகத்தில் ஜூலை மாதம் 9 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் 28-ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்று ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருப்பூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலாளர், பொதுத்துறை செயலாளர், மருத்துவத் துறை செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் உடன் ஆலோசிக்க உள்ளார்.
தற்போது கொரொனா தொற்று அதிகரிப்பதால் கூடுதல் தளர்வுகளா அல்லது கட்டுப்பாடுகளா என்பது ஆலோசனையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






