ஒரு கோடி பார்வையாளரை கடந்த நாங்க வேற மாறி பாடல்..!
நாங்க வேற மாதிரி பாடல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு யூடியூபில் சோனி மியூசிக் இல் வெளியானது. நடிகர் அஜித் நடிப்பில் லட்சுமி தியேட்டர் நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பின் இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் வலிமை.
இந்த படத்தின் முதல் பாடல் கடந்த இரு நாட்களுக்கு முன் யூடியூபில் சோனி மியூசிக் பக்கத்தில் வெளியானது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவான நாங்க வேற மாதிரி என்கிற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.






