--- --:--:-- --

காவல்துறையினருக்கு கொரோனா பரவியதால் ராணுவம் அழைக்கப்படுமா ?

10.2

மும்பையில் காவல்துறையினர் பலருக்கும் கொரொனா பரவி வருவதால் பாதுகாப்பு பணிக்கு ராணுவம் வரப் போவதாக வெளியான தகவல்களை மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார். மொத்தம் 16’0 போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் .

 

காவல்துறையினர் கடும் நெருக்கடியில் பணியாற்றி வந்தாலும் இராணுவத்தை அழைக்க வேண்டிய அவசியமில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மாநிலத்தில் இதுவரை சுமார் 18 ஆயிரம் பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இது மிகப்பெரிய எண்ணிக்கை என்று கூறிய தாக்கரே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே டிரோன் பகுதியில் 15 போலீஸ்காரர்களுக்கு கொரொனா பரவி உள்ளது.

Leave a Reply

Right Menu Icon