ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பா..?
ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சரான அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரொனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் பின்னர் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது கொரொனா அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு நிலையில் தற்போது கொரொனா இரண்டாவது அலை குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்கும்படி ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.







