விஜய்க்கு விதித்திருந்த அபராதத்திற்கு இடைக்கால தடை..!
சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்திருந்த அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும் திரையில் சமூகநீதிக்கு பாடுபடுவதாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த தயார் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் தனி நீதிபதி குறிப்பிட்ட விமர்சனங்களை நீக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
சொகுசு காருக்கு நடிகர் விஜய் நுழைவு வரி செலுத்தினால் போதும். அபராதம் விமர்சனங்கள் பற்றி கருத்து கூற ஏதும் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார் காலம் நுழைவு வரியை ஏழு அல்லது பத்து நாட்களில் செலுத்த தயார் என்று விஜய் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனை எதிர்த்து நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி தெரிவித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்தனர்.







