வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் வீடியோ காலில் சண்டையிட்டு மனைவி தற்கொலை..!
வெளிநாட்டில் வசிக்கும் கணவருடன் வீடியோ காலில் வாக்குவாதம் செய்து கொண்டே மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவிலை சேர்ந்த செல்வராஜ்- ஆக்னஸ் தம்பதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்ற செல்வராஜ் சரிவர பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே வீடியோ காலில் தினசரி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
வியாழக்கிழமை வழக்கம்போல் கணவருடன் வீடியோ காலில் சண்டையிட்ட ஆக்னஸ் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.







