நயன்தாராவின் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது..!
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை சரவணன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார்.
மூக்குத்தி அம்மன் திரைப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் திரையரங்குகள் இல்லாததால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில் ஹாட்ஸ்டார் தளத்தில் மூக்குத்தி அம்மன் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







