--- --:--:-- --

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?

1

மிழ்நாட்டின் பெரும்பாலான நீர் தேவையை பூர்த்தி செய்யும் மழையாக வடகிழக்கு பருவமழை உள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது தமிழ்நாட்டிற்கு மழை கிடைத்தாலும், கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்கள் அளவுக்கு தமிழகத்திற்கு மழை கிடைக்காது.

 

இதனால் வடகிழக்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம். தென் தமிழகம் மற்றும் வட தமிழகம் என மாநிலம் முழுமைக்கும் வடகிழக்கு பருவமழையின் நல்ல மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போதே தமிழகத்திற்கு நல்ல மழை பொழிவு கிடைத்தது.

 

இயல்பை விடவும் அதிக மழையை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் பெற்றது. இந்நிலையில் தென் மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

 

ஏற்கனவே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் அக்டோபர் 3ஆவது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் கூறியிருந்தது.

 

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 15 ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Right Menu Icon