--- --:--:-- --

திருவாடானை அருகே புல்ஒளி நாதர் திருக்கோவில் மகா சண்டிவ வேள்வி  நடைபெற்றது.

2

திருவாடானை அருகே அருள்தரும் அரியநாச்சி அம்மை உடனுறை அருள்மிகு புல்ஒளி நாதர் திருக்கோவில் மகா சண்டிவ வேள்வி  நடைபெற்றது.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தில் அருள் தரும் அரியநாச்சி அம்மை உடனுறை அருள்மிகு புல் ஒளிநாதர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் இன்று மகா சண்டி வேள்வி நடைபெற்றது.

இந்த வேள்வியானது உலக நன்மை வேண்டியும், நல்ல விளைச்சல் வேண்டியும் நடை பெற்ற வேள்வி காலை திருவிளக்கு வழிபாடு, குரு வணக்கம்  புனித நீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, என தொடங்கி, திருக்குடங்களை வைத்து வேள்வி தொடங்கி நடைபெற்றது.

 

வேள்வி நிறைவடைந்ததை தொடர்ந்து திருக்குடங்கள் ஆலயத்தை வலம் வந்தன. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏளமான கலந்துகொண்டு அரியநாச்சி அம்மைக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை வழிபாடு செய்து அருள் பெற்று சென்றனர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமான கலந்துகொண்டனர்

Right Menu Icon