--- --:--:-- --

தன் மீது குற்றச்சாட்டை தெரிவித்த தயாரிப்பாளருக்கு நடிகர் அஜீத்தின் பதில் என்ன..?

5

ரத்குமார் நடித்த கூலி, விஜய்யின் மாண்புமிகு மாணவன், கார்த்திக் நடித்த சீனு, கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பெற்றோரை வெளிநாடு அழைத்து செல்ல நடிகர் அஜீத் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

 

இந்த பணத்தை அடுத்ததாக நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து அடுத்த படத்திற்கான சம்பளத் தொகையை கழித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து அதற்காக தான் தயாரித்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதாக தெரிவித்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், அந்த பணத்தை அஜீத் தற்போது வரை திருப்பித் தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

தன்னிடம் 2 லட்சம் ரூபாய் பணம் பெற்றதற்கான வங்கி காசோலை ஆதாரத்தை வெளியிட்ட மாணிக்கம் நாராயணன் அஜித் ஜென்டில்மேன் என்று சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது என்று கடுமையாக சாடி அதோடு இத்தனை ஆண்டுகளுக்கான வட்டியோடு சேர்த்து தன்னுடைய பணத்தை அஜித்திடமிருந்து வசூல் செய்ய தங்கள் சங்கத்தில் புகார் அளியுங்கள் இந்த பணத்திற்காக வலிமை படத்தை முடக்கி விடலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

 

அதனை தான் ஒருபோதும் செய்யமாட்டேன் ஏனென்றால் செவன் ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் வெளியிட்ட சிக்கல்களை பணம் கொடுத்து தீர்த்து வைத்த ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்தவன் என்பதால் எனது பணத்தை மட்டுமே திரும்ப பெறுவேன் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

 

இந்த குற்றச்சாட்டு குறித்து அஜித் தரப்பில் விசாரித்தபோது அஜித் கூறிய வார்த்தைகள் வியப்பை ஏற்படுத்தியது. வயதில் மூத்த தயாரிப்பாளர் என்ன காரணத்துக்காக இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை என்னை களங்கப்படுத்துவதில் அவருக்கு சந்தோஷம் என்றால் இருந்துவிட்டு போகட்டும்.

 

அவருக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் ஏற்கனவே நாட்டில் சினிமாவை விட முக்கியமான பிரச்சனைகள் ஏராளமாக இருக்க மக்கள் சினிமாக்காரர்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர்.

 

இந்த நிலையில் நாம் ஏதாவது பேசினால் நம் மீது மக்களுக்கு கூடுதல் கோபம்தான் உருவாகும். எனவே இந்த விவகாரத்தை கண்டுகொள்ள வேண்டாம் என்று அஜித் கேட்டுக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon