தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? – அமைச்சர் மரிய வில்சன்
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்தாண்டு தொடக்கத்தில் முந்தைய தி.மு.க ஆட்சியில் 2026- 27 இடைக் கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து த.வெ.க அரசு அமைந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக துறைவாரியாக முதல்வர் விஜய் தலைமையில் நாள்தோறும் ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஜூலை 16ல் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டமும் நடந்து முடிந்தது.
இதையடுத்து பட்ஜெட் தாக்கல் தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், கடந்த 15 நாள்கள் துறைரீதியாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சரவைக் கூட்டமும் நன்றாக முடிந்தது. தொடர்ந்து த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும். தமிழக மக்கள் எங்களுடைய அரசுக்கு வரவேற்பு தெரிவிக்கிறார்கள், எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.






