--- --:--:-- --

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

4

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

 

அதில் விடுதியில் தங்கி பயன்பெறும் சுமார் 800 மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து கல்வி பயிலும் சிறப்பு பள்ளிகளுக்கு வருவதற்கு போக்குவரத்து துறை மூலம் 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் பயணிக்கலாம் என்றும் தேர்வு எழுதிய பிறகு திரும்ப அழைத்து வருவதற்கும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon