72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு..!
2024ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஜூலை 18) மாலை 5.30 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளன.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான வெற்றியாளர்கள் வெளியாக உள்ளனர். இந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் குறித்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.






