--- --:--:-- --

வெள்ளியங்காடு ஊராட்சியில் அ.தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.கழக அமைப்புச்செயலாளர் ஏ.கே.செல்வராஜ் கலந்து கொண்டு வழங்கினார் !!!

1

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ) கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான ஏ.டி காலனி,ஆதிமாதையனூர்,பறையன் கோம்பை,சுண்டக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3500 பேருக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை,  காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சியில. மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் ,ஒன்றிய செயலாளர் பி.டி. கந்தசாமி,ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், வெள்ளியங்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி ,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரங்கராஜ்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon