உருகி உருகி காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலன்! காதலி அளித்த புகாரால் நடந்தது என்ன?
நான்கு வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணுட ன் திருமணம் செய்ய திட்டமிட்ட பொறியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டது எப்படி?
24 வயதான விஷ்ணு குமரன் தான் காதலித்த பெண்ணை கைவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டான். பெண்னை திருமண ஆசை வார்த்தை கூறி நான்கு வருடங்களாக உருகி உருகி காதலித்த அவர் திடீரென காதலியை கைவிட காரணம் என்ன?
சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் 24 வயதான விஷ்ணு குமரன் .பொறியியல் பட்டதாரியான விஷ்ணு சேலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றினார். விஷ்ணு குமாரனுக்கும் கந்தம்பட்டி சேர்ந்த எம் காம் பட்டதாரியான 23 வயதான சுபத்ரா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தனது பேச்சால் சுபத்ராவை தனது வலையில் சிக்க வைத்த விஷ்ணு கடந்த நான்கு வருடங்களாக உருகி உருகி காதலித்துள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சுபத்ராவை அழைத்துக் கொண்டு ஊரை சுற்றியுள்ள விஷ்ணு.

நான்கு வருடங்களாக சுபத்ராவை பின்பற்றி வந்த விஷ்ணு கடந்த சில மாதங்களாக அவரது செல்போன் அழைப்புகளை எடுக்காமல் இருந்துள்ளனர். மேலும் விஷ்ணுவுக்கும், வேறொரு பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக நண்பர்கள் மூலமாக சுபத்திராவுக்கு தகவலும் கிடைத்துள்ளது. தகவலறிந்த சுபத்ரா தனது காதலன் விஷ்ணுவை அவரது பணி செய்யும் இடத்திற்கே சென்று நேரில் சந்தித்து திருமண ஏற்பாடுகள் குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட விஷ்ணு நடந்தவற்றை ஒரு கனவாக நினைத்து மறந்து விடு என்று திரைப்பட வசனங்களை அள்ளி விட்டுள்ளார். ஆத்திரமடைந்த சுபத்திரா என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தானே இத்தனை நாள் ஏமாற்றியுள்ளாய் மரியாதையாக திருமணம் செய்துகொள் என வலியுறுத்தினார்.
ஆனால் எவ்வளவு சொல்லியும் சுபத்ராவை விஷ்ணு அலட்சியம் செய்ததாக தெரிகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த விஷ்ணு மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொறியாளர் விஷ்ணுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







