--- --:--:-- --

திருவாடானையில் நடுரோட்டில் நிறுத்தப்பட்ட சீர் வரிசை வேன்: ஸ்தம்பித்த போக்குவரத்து – பொதுமக்கள் அவதி

14

​திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சினேகவல்லி அம்மன் உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று சுப முகூர்த்த தினம் என்பதால், அதிகாலை முதலே திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் 15 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்க இருந்ததால் கோவிலில் குவிந்தனர்.

 

​போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் ‘: ​கோவில் முன்பு மக்கள் கூட்டம் அதிகமிருந்த நிலையில், அங்கு வந்த சீர் வரிசை ஏற்றி வந்த வேன் ஒன்று முறையான வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படாமல், சாலையின் நடுவே நிறுத்தப்பட்டது. இதனால் மெயின் ரோட்டில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

​மக்கள் கோரிக்கை : ​இந்த போக்குவரத்து நெரிசலால் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். முகூர்த்த நாட்களில் இக்கோவிலில் மக்கள் வருகை அதிகமாக இருப்பதால், அந்தச் சமயங்களில், ​கூடுதல் காவல்துறையினரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

​வாகனங்களை முறைப்படுத்த உரிய இடவசதி செய்து தரப்பட வேண்டும்.
​முக்கியமான நாட்களில் இத்தகைய அவதிகளைத் தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Right Menu Icon