--- --:--:-- --

வரலாறு காணாத அளவு தங்கம் விலை உயர்வு..!

1

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. நாளுக்கு நாள் சிறுக சிறுக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.

அந்த வகையில் நேற்று (28.01.2026) காலை, மாலை என 2 வேளையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடைசியாக, நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.15,610க்கும், சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,8000க்கும், சவரனுக்கு ரூ.9,520உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.7,000 உயர்ந்து ரூ.1,11,200க்கும், கிராமுக்கு ரூ.875 உயர்ந்து ரூ.13,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.425க்கும்,கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.4,25,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon