--- --:--:-- --

தமிழகத்தை நெருக்கி வரும் ஃபனி புயல்! வானிலை மையம் வெளியிட்ட புதிய தகவல்

Sat Image

தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல், 30 ஆம் தேதி மாலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 

வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

 

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

 

இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், இது ஃபனி புயலாக வலுப்பெறும்.

 

இந்த புயலானது இலங்கை கடல் பகுதியில் வடமேற்காக நகரலாம். ஏப்ரல் 30ஆம் தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை, ஃபனி புயல் நெருங்கும். தற்போது இது, சென்னைக்கு தென்கிழக்கே 1210 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

 

ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon