--- --:--:-- --

முதன்முறையாக தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் விஜய்

3

நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார். இதைத் தொடர்ந்து பொது மக்களிடையே முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.நாடு முழுவதும் 80-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்ற வருகை தந்தார்.

 

 

முதலமைச்சர் விஜயின் பெற்றோர், நடிகை திரிஷா உள்ளிட்டோர் வருகை தந்தனர். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர். சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சிங்கப்பெண் அதிரடி படையினர், இயற்கை பேரிடர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.

 

இதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தேசிய கொடியை முதலமைச்சர் விஜய் முதன்முறையாக ஏற்றினார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் இடையே முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon