சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜயின் 5 முக்கிய அறிவிப்புகள்..!
சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சிங்கப்பெண் அதிரடி படையினர், இயற்கை பேரிடர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார். இதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தேசிய கொடியை முதலமைச்சர் விஜய் முதன்முறையாக ஏற்றினார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் இடையே முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 386 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில், 80வது சுதந்திர தினத்தில் கொடி ஏற்ற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம்தான் என்றும் தெரிவித்தார். மேலும் பொதுவாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது.
மக்கள் நலன் தான் மிக மிக முக்கியமான விஷயம். அதன் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலங்களை தேடி வரக்கூடிய மக்களை கண்ணியமாக நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கினார்.இதையடுத்து விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1.முன்னாள் படை வீரர்களின் அவர்களது 2 மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2.மாற்றுத்திறன் கொண்ட படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாதந்திர நிதி உதவி ரூ.5000-த்தில் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படுகிறது.
3.மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
4.மாநில அரசால் விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்படும்.
5.வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரம் உள்ளிட்டோர் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





