மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 – முதலமைச்சர் விஜய்
தவெக அரசு பொறுப்பேற்ற பின், முதன் முதலாக அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 05) நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் குறிப்பாக மகளிருக்கு மாதம் ரூ.2500 திட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றது. தொடர்ந்து மே 21 ஆம் தேதி 23 அமைச்சர்களும், மே 22 ஆம் தேதி இரு அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தலின் போது தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், குறுவிவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன.
மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்த வேண்டியுள்ளது. இவை குறித்தும் மேலும், தாக்கல் செய்ய வேண்டிய முழு பட்ஜெட் பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மகளிருக்கு மாதம் ரூ.2500 திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.





