--- --:--:-- --

நாமும் ஆட்சியில் பங்குபெறுவோம்.. மெகா கூட்டணி அமைப்போம் – பொதுக்குழுவில் அன்புமணி சூளுரை

1

சென்னை அடுத்த மாமல்லபுரம் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில், “நாமும் ஆட்சியில் பங்குபெறுவோம், மெகா கூட்டணி அமைப்போம். உங்களுடைய எண்ணத்தின் படிதான் கூட்டணி அமையும்” என பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கட்சியின் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

 

ஆனால், கட்சியின் தலைவரை பொதுக்குழுவைக் கூட்டித்தான் நீக்க முடியும் என்றும், அதனால் ராமதாஸ் அறிவித்தது செல்லாது என்றும், தானே தலைவர் என்றும் அன்புமணி கூறிவருகிறார். இதற்கு ராமதாஸ் தரப்பு, கட்சி விதிகளின்படி தலைவரின் பதவி காலம் முடிந்ததும், அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விடைபெறுவார். அடுத்த தலைவரை நியமிக்கும் வரை நிறுவனர் தான் கட்சியின் தலைவர் என விளக்கம் கொடுக்கப்பட்டது.

கேரள மட்டை அரிசியின் 6 முக்கிய ஆரோக்கிய நன்மைகள்.!
கேரள மட்டை அரிசியின் 6 முக்கிய ஆரோக்கிய நன்மைகள்.!
இதேபோல், இருவரும் நிர்வாகிகளை நீக்குவதும், இணைப்பதுமாக செயல்பட்டுவருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தலைமையில், பொதுக்குழுவை அறிவித்தார். இதனையடுத்து, அன்புமணி பொதுக்குழுவை அறிவித்தார்.

 

இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணியின் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கினார். இதனையடுத்து இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

 

இதில், பங்கேற்று பேசிய அன்புமணி, “மருத்துவர் ராமதாஸின் கனவுகளான சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவைகளை இணைந்து நிறைவேற்றுவோம். சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வெளியேற்றுவோம். திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பவும் என அரசியல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓராண்டு காலம் தலைவராக தொடர வாய்ப்பு அளித்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. பொறுப்புடன், கடமையுடன் வழிநடத்துவேன். யார் ஆட்சிக்கு வரவேண்டும்? யார் ஆட்சிக்கு வரக்கூடாது என நமக்கு இரண்டு இலக்கு உள்ளன. ஒரு இலக்கு திமுக மீண்டும் வரக்கூடாது. முதலில் தெளிவாக இருக்கிறோம்.

 

 

அடுத்து யார் வரவேண்டும் என்பது ரொம்ப முக்கியமானது. அதை சிறுகாலத்தில் நாம் முடிவு செய்வோம். நல்ல கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணி அமைப்போம். நாமும் ஆட்சியில் பங்கு பெறுவோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரியும். உங்களுடைய எண்ணத்தின்படி தான் கூட்டணி அமையும்.

Right Menu Icon