--- --:--:-- --

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

4

ல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்புசாமி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்தினால் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்படுவதாக புகார்கள் வருவதாக தெரிவித்தார்.

 

அவர்களை தண்டிப்பது, பெற்றோர்களை தரக்குறைவாக பேசி அவமதிப்பது போன்றவை அடிப்படைக் கல்வி உரிமையை மறுக்கும் செயலாகும் என குறிப்பிட்டார்.

 

இது போன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்கக்கூடாது எனவும் மேலும் தனியார் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon