விக்ரம் பட வெளியீட்டுத் தேதி குறித்து புதிய அறிவிப்பு..!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி வருகிற மார்ச் 14-ஆம் நாள் காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.





