மின்மயானத்தில் கொரொனாவினால் உயிரிழந்தவரின் உடலை எரியூட்ட 5 மணி நேரமாக காத்திருக்கும் அவலம்..!
திருச்சியில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டவரின் உடல் 5 மணி நேரமாக சுடுகாட்டு நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் கொரொனா நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். அதில் குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய மாநில தலைவர் புலியூர் நாகராஜனும் ஒருவர்.
இந்தநிலையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை திருச்சி சுடுகாட்டில் மின் தகன மேடையில் எறி ஊட்டுவதற்காக கொண்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு ஏற்கனவே 5 இறந்தவர்களின் உடல்கள் இருந்ததனால் அந்த உடல்களை முதலில் எறிக்குமாரி உறவினர்கள் சண்டையிட்டுள்ளனர்.
அதனால் தாங்கள் கொண்டுவந்த உடலை எரியூட்டிய பிறகுதான் கொரொனா நோயாளியின் உடலை எரியூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சி ஊழியர்கள் கொரொனாவினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை வெகு நேரம் வைக்கப்பட கூடாது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தும் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் கொரொனாவினால் பாதிக்கப்பட்டவரின் உடல் காலை 11 முதல் ஐந்து மணி நேரம் இருக்கும் மேலாக ஆம்புலன்சில் வைக்கப்பட்டுள்ளது.





