மாயமான சிறுமி குளத்தில் சடலமாக மீட்பு..! கொலையா என சந்தேகம்..!
அறந்தாங்கி அருகே மாயமான சிறுமி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவுடையார்கோவில் வட்டம் ஏம்பல் மேல குடியிருப்பை சேர்ந்த நாகூரான் செல்வி தம்பதியினரின் மகள் ஜெயப்பிரியா என்ற 7 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் பதறிய பெற்றோர்கள் ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஊரணியில் ஜெயப்பிரியா இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






