--- --:--:-- --

பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்..!

6

மிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. மின்னணு இயந்திரங்களை அனுப்பும் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

29ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற தேர்தலுக்கான பணிகள் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இதேபோல் மாவட்டம் தோறும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

 

தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட வளாகத்தில் இருந்து திருவையாறு மேலத்திருப்பந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கு வாக்கு எந்திரங்கள் அனுப்பப்பட்டது. இதனிடையே வாகன சோதனைகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

திருவள்ளூரில் கனகம்மா சத்திரம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை ஆய்வு செய்த அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் 4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

 

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Right Menu Icon