--- --:--:-- --

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு கீழ் சரிந்த கொரோனா..!

5

மிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 4,519 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 20 ஆயிரத்து 505 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரொனாவுக்கு ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 809 அதிகரித்துள்ளது. தமிழகத்திலிருந்து ஒரே நாளில் 20 ஆயிரத்து 237 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 90,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த கோவையில் 778 பேருக்கும், செங்கல்பட்டில் 398 பேருக்கும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

Right Menu Icon