--- --:--:-- --

தொண்டர் பலி..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை வழக்கு..!

6

டையை மீறி போராட்டம் நடத்தியதில் தொண்டர் பலியான விவகாரத்தில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஒட்டி முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான கட்சி சார்பில் பிரச்சார பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பேரவைக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி தொண்டர்கள் இம்ரான் இல்லம் முன்பு குவிந்தனர்.

 

அப்பொழுது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே போராட்டம் ஏற்பட்டது. போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதலில் ஒரு தொண்டர் உயிரிழந்தார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இம்ரான்கான் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon