மாட்டிறைச்சி வைத்ததாக முதியவரை சரமாரியாக அடித்துக் கொன்ற கும்பல்..3 பேர் கைது..!
பீகார் மாநிலத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறிய முதியவர் மீது ஒரு கும்பல் சாரமாரி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 52 வயது முதியவர் தனது உறவினர் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது இருவரையும் ஒரு கும்பல் இடைமறித்து வைத்திருப்பதாக சந்தேகம் அடைந்து இருவரிடமும் அந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தாங்கள் வைத்திருந்த உருட்டு கட்டையால் அந்த கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்து அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் ஒருவர் மாட்டிக் கொண்டதால் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மாட்டிறைச்சி வைத்ததாக சந்தேகத்தில் முதியவரை அடித்து கொன்ற மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





