--- --:--:-- --

சிவகங்கை அருகே குடிமராமத்து பணியில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்

37

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே குண்டேந்தல் பட்டியில் பிராமண கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாய் மூலம் குண்டேந்தல்பட்டி, பிராமணபட்டி, கண்ணாயிருப்பு, பூமனந்தான் பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மூலம் பிராமண கண்மாயை ரூபாய் 80 லட்சம் செலவில் குடிமராமத்து பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

 

இதில் விவசாயிகள் இரு குழுக்களாக பிரிந்து பங்கேற்றதால் பணிமேற்கொள்ள முடியாமல் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து குண்டேந்தல்பட்டி கிராமத்தில் 4 கிராம மக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இரு பிரிவினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தையில்ஈடுபட்டார்.

 

இதில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். அப்போது அரசியல் கட்சியினர் 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

 

எனவே அனுமதிக்கப்பட்ட 80 லட்ச ரூபாயும் எவ்வித முறைகேடும் இல்லாமல் முழுமையாக குடிமராமத்து பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Right Menu Icon